சினிமா துளிகள்

இந்தியில் ரீமேக் ஆகும் பா.இரஞ்சித் படம் + "||" + Pa. Ranjith is a remake in Hindi

இந்தியில் ரீமேக் ஆகும் பா.இரஞ்சித் படம்

இந்தியில் ரீமேக் ஆகும் பா.இரஞ்சித் படம்
தமிழில் பா.இரஞ்சித் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம், விரைவில் பாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ் படங்களுக்கு பாலிவுட்டில் அதிக மவுசு உருவாகி உள்ளது. ஏற்கனவே பார்த்திபனின் ஒத்த செருப்பு, விஷ்ணு விஷாலின் ராட்சசன், சூர்யா நடித்த சூரரைப்போற்று, லோகேஷ் கனகராஜின் மாநகரம், கார்த்தி நடித்த கைதி ஆகிய படங்கள் பாலிவுட்டில் ரீமேக் ஆகி வருகின்றன.


இந்நிலையில், மேலும் ஒரு தமிழ் படம் அந்த பட்டியலில் இணைந்துள்ளது. அதன்படி பா.இரஞ்சித் இயக்கத்தில் வெளியான ‘மெட்ராஸ்’ திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

பா.இரஞ்சித் இயக்கிய மெட்ராஸ் படத்தில் கார்த்தி ஹீரோவாக நடித்திருந்தார். ஒரு சுவரை மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டிருந்தது. கடந்த 2014-ம் ஆண்டு வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்றது.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியில் ரீமேக் ஆகிறது ‘திருட்டுப்பயலே 2’
தமிழில் கடந்த 2017-ல் வெளியாகி வரவேற்பை பெற்ற ‘திருட்டுப்பயலே 2’ படத்தில் பாபி சிம்ஹா, பிரசன்னா, அமலாபால் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
2. விஜய் சேதுபதியின் 96 படம் இந்தியில் ரீமேக்
தமிழில் விஜய் சேதுபதி, திரிஷா நடித்து 2018-ல் வெளியான படம் 96. இந்த படத்துக்கு வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வரவேற்பு கிடைத்தது.
3. இந்தியில் ரீமேக் ஆகும் விஜய் சேதுபதியின் ‘96’
தமிழில் பிளாக்பஸ்டர் ஹிட்டான 96 திரைப்படம் ஏற்கனவே தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
4. அஜித்தின் 2 படங்கள் தெலுங்கில் ‘ரீமேக்'
வெற்றி பெற்ற பிறமொழி படங்களை தெலுங்கில் ரீமேக் செய்து நடிக்க சிரஞ்சீவி ஆர்வம் காட்டுகிறார்.
5. சமந்தா படம் இந்தியில் ரீமேக்
சமந்தா படம் இந்தியில் ரீமேக்.