வைல்டு கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல உள்ள பிரபல நடிகை - யார் தெரியுமா?


வைல்டு கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல உள்ள பிரபல நடிகை - யார் தெரியுமா?
x
தினத்தந்தி 12 Oct 2021 11:46 PM IST (Updated: 12 Oct 2021 11:46 PM IST)
t-max-icont-min-icon

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனில் பிரபல நடிகை வைல்டு கார்டு என்ட்ரியாக செல்ல உள்ளாராம்.

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் அக்டோபர் 3-ந் தேதி தொடங்கியது. இதில் 10 பெண் போட்டியாளர்கள், 7 ஆண் போட்டியாளர்கள், 1 திருநங்கை என மொத்தம் 18 பேர் கலந்துகொண்டனர். முதல் வார இறுதியில் திருநங்கை நமீதா மாரிமுத்து, மருத்துவ காரணங்களுக்காக திடீரென வெளியேறினார். அதுமட்டுமின்றி முதல் வாரத்தில் எலிமினேஷன் இல்லாததால் தற்போது 17 போட்டியாளர்கள் உள்ளனர்.

வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு என்ட்ரியாக போட்டியாளர்கள் கலந்துகொள்வது வழக்கம். 40 அல்லது 50 நாட்கள் கடந்த பின்னரே வைல்டு கார்டு என்ட்ரியாக போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்படுவார்கள். ஆனால் தற்போது முதல் வாரத்திலேயே நமீதா மாரிமுத்து வெளியேறியதால், அவருக்கு பதில் ஒரு வைல்டு கார்டு போட்டியாளரை உள்ளே அனுப்ப உள்ளார்களாம்.

அதன்படி வருகிற அக்டோபர் 16-ந் தேதி நடிகை ஷாலு ஷம்மு வைல்டு கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம், மிஸ்டர் லோக்கல், இரண்டாம் குத்து போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
1 More update

Next Story