ரொமாண்டிக் பேண்டஸி படத்தில் சமந்தா


ரொமாண்டிக் பேண்டஸி படத்தில் சமந்தா
x
தினத்தந்தி 17 Oct 2021 5:53 PM GMT (Updated: 17 Oct 2021 5:53 PM GMT)

தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமாக இருக்கும் நடிகை சமந்தா, அடுத்ததாக ரொமாண்டி பேண்டஸி படத்தில் நடிக்க இருக்கிறார்.

முன்னணி நடிகர்களாக இருக்கும் விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ், விஷால் உள்ளிட்ட பலருடன் சேர்ந்து நடித்தவர் சமந்தா. தற்போது விக்னேஷ் சிவனின் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ மற்றும் தெலுங்கு படத்திலும் சமந்தா நடித்து வருகிறார். மேலும், நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில் நடித்து வருகிறார் சமந்தா.

இந்நிலையில், ரொமாண்டிக் பேண்டஸி வகையில் உருவாகவுள்ள படத்தில் சமந்தா நடிக்க இருக்கிறார். இப்படத்தை அறிமுக இயக்குனர் சாந்தரூபன் ஞானசேகரன் இயக்குகிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம், தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகிறது. இப்படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறார்கள்.

Next Story