ஹாட்ரிக் வெற்றி.... உற்சாகத்தில் ‘அரண்மனை 3’ படக்குழு


ஹாட்ரிக் வெற்றி.... உற்சாகத்தில் ‘அரண்மனை 3’ படக்குழு
x
தினத்தந்தி 19 Oct 2021 10:51 PM IST (Updated: 19 Oct 2021 10:51 PM IST)
t-max-icont-min-icon

ஆயுத பூஜையன்று திரையரங்குகளில் வெளியான ‘அரண்மனை 3’ திரைப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

சுந்தர்.சி இயக்கத்தில் வெளியாகி இருக்கும் திரைப்படம் ‘அரண்மனை 3’. ஆர்யா ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷி கன்னா, ஆண்ட்ரியா, சாக்‌ஷி அகர்வால் ஆகியோர் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். சி.சத்யா இசையமைத்துள்ள இப்படத்திற்கு செந்தில் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் சார்பில் குஷ்பு தயாரித்திருக்கும் இப்படத்தை உதயநிதி ஸ்டாலின், ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் மூலம் வெளியிட்டுள்ளார். அக்டோபர் 14-ந் தேதி ஆயுத பூஜையன்று திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

பண்டிகை தின விடுமுறையில் வெளியானதால் இப்படம் வசூலையும் வாரிக் குவித்து வருகிறது. அரண்மனை படத்தின் முதல் இரண்டு பாகங்களைப் போல் இந்த படத்திற்கும் வரவேற்பு கிடைத்து வருவதால் படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர்.
1 More update

Next Story