ஆஸ்கார் விருதுக்கான போட்டியில் யோகிபாபுவின் ‘மண்டேலா’


ஆஸ்கார் விருதுக்கான போட்டியில் யோகிபாபுவின் ‘மண்டேலா’
x
தினத்தந்தி 22 Oct 2021 10:44 PM IST (Updated: 22 Oct 2021 10:44 PM IST)
t-max-icont-min-icon

தனிநபரின் வாக்குக்கு எவ்வளவு மதிப்பு உண்டு என்பதை அரசியல் நையாண்டியுடன் ‘மண்டேலா’ படத்தில் சொல்லி இருந்தார்கள்.

உலகளவில் பிரபலமான ஆஸ்கார் விருது வழங்கும் விழா ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவில் நடத்தப்படுகிறது. அதில் சிறந்த படங்கள், நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு ஆஸ்கார் விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும், இந்திய அளவில் சிறந்த திரைப்படங்களை தேர்வு செய்து, அதிலிருந்து ஒரு படத்தை வேற்று மொழிக்கான ஆஸ்கார் விருதுக்கு இந்தியா சார்பில் பரிந்துரை செய்யப்படும்.

அந்த வகையில் இந்த ஆண்டு இந்தியா சார்பாக 14 படங்கள் போட்டி போடுகின்றன, அதில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் யோகிபாபு நடித்த ‘மண்டேலா’ படமும் உள்ளது. அந்த போட்டியில் இடம்பெற்ற ஒரே தமிழ் படம் இதுதான்.

இயக்குநர் ஷாஜி என். கருண் தலைமையிலான 15 பேர் கொண்ட குழு இந்த 14 படங்களையும் பார்த்து, அதிலிருந்து ஒரு படத்தைத் தேர்வு செய்து இந்தியா சார்பில் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்வர். அந்த ஒரு படம் ‘மண்டேலா’-வாக இருக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
1 More update

Next Story