பிக்பாஸ் பிரபலத்திற்கு குரல் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்


பிக்பாஸ் பிரபலத்திற்கு குரல் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்
x
தினத்தந்தி 22 Oct 2021 5:19 PM GMT (Updated: 22 Oct 2021 5:19 PM GMT)

தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராகவும், பிசியான நடிகராகவும் வலம் வரும் ஜிவி பிரகாஷ், பிக்பாஸ் பிரபலத்திற்காக குரல் கொடுத்துள்ளார்.

மலையாளத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படம் ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25’. இப்படத்தை ‘கூகுள் குட்டப்பா’ என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்துள்ளனர். இப்படத்தில் பிக்பாஸ் பிரபலங்களான தர்ஷனும், லாஸ்லியாவும் ஜோடியாக நடித்துள்ளனர். இப்படத்தை இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பதோடு, தர்ஷனின் தந்தை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.

அறிமுக இயக்குனர்கள் சரவணன், சபரி ஆகியோர் இப்படத்தை இயக்கி உள்ளனர். இவர்கள் இருவரும் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவி இயக்குனர்களாக பணியாற்றியவர்கள் ஆவர். இப்படத்திற்கு ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி கூகுள் குட்டப்பா படத்திற்காக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ரொமாண்டிக் பாடல் ஒன்றை பாடி உள்ளார். இப்பாடலுக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்பாடல் வரிகளை மதன் கார்க்கி எழுதி உள்ளார். விரைவில் இந்த பாடல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படும்.

Next Story