நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் என்னங்க சார் உங்க சட்டம்


நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் என்னங்க சார் உங்க சட்டம்
x
தினத்தந்தி 22 Oct 2021 6:11 PM GMT (Updated: 22 Oct 2021 6:11 PM GMT)

போஸ்டர் மற்றும் டிரைலர் மூலம் பலருடைய கவனத்தை ஈர்த்த என்னங்க சார் உங்க சட்டம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரபு ஜெயராம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் “என்னங்க சார் உங்க சட்டம்”. பீச்சாங்கை திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த ஆர்.எஸ்.கார்த்திக், இந்த படத்தில் நாயகனாக நடித்துள்ளார். மேலும் ஐரா, பகவதி பெருமாள், ரோகினி, ஜூனியர் பாலையா, சௌந்தர்யா பாலா நந்தகுமார், தான்யா, எல்வின் சுபா, கயல் வின்சன்ட், பர்கத் பிரோஷா, மீரா மிதுன், மெட்ராஸ் மீட்டர் கோபால், விஸ்வந்த், நக்கலைட்ஸ் தனம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பலருடைய கவனத்தை ஈர்த்தது. மேலும் இதன் டிரைலர் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலானது. சமீபத்தில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சிறப்பான திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. “என்னங்க சார் உங்க சட்டம்” திரைப்படமும் இதே கதைக்கருவில் தான் உருவாகியுள்ளது.

இந்நிலையில், இப்படம் நேரடியாக சோனி லைவ் ஓடிடி தளத்தில் அக்டோபர் 29ம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் சுதன் சுந்தரம் மற்றும் ஜி.ஜெயராம் ஆகியோர் தயாரித்து இருக்கிறார்கள்.

Next Story