சசிகுமாருக்கு போட்டியாக களமிறங்கும் கீர்த்தி சுரேஷ்


சசிகுமாருக்கு போட்டியாக களமிறங்கும் கீர்த்தி சுரேஷ்
x
தினத்தந்தி 2 Nov 2021 6:17 PM GMT (Updated: 2 Nov 2021 6:17 PM GMT)

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ், பட ரிலீஸில் சசிகுமாருக்கு போட்டியாக களமிறங்க உள்ளார்.

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ‘குட்லக் சகி’. நாகேஷ் குக்குனூர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் எடுக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு, காதல், நகைச்சுவைப் பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஆதி பினிஷெட்டி மற்றும் ஜகபதி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதில் கீர்த்தி சுரேஷ் துப்பாக்கி சுடும் வீராங்கனையாக நடித்துள்ளார்.

இந்நிலையில், இப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி ‘குட்லக் சகி’ திரைப்படம் வருகிற நவம்பர் 26-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அன்றைய தினம் சசிகுமார் நடித்துள்ள ‘கொம்புவச்ச சிங்கம்டா’, ‘ராஜவம்சம்’ ஆகிய படங்கள் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் சசிகுமார் படங்களுக்கு போட்டியாக கீர்த்தி சுரேஷின் ‘குட்லக் சகி’ திரைப்படம் களமிறங்கி உள்ளது.

Next Story