‘நான் ஒரு போராளி’ -நடிகை சமந்தா

கணவர் நாகசைதன்யாவை விவாகரத்து செய்வதாக அறிவித்த சமந்தா மீண்டும் படங்களில் தீவிரமாக நடிக்க தொடங்கி உள்ளார்.
கணவர் நாகசைதன்யாவை விவாகரத்து செய்வதாக அறிவித்த சமந்தா மீண்டும் படங்களில் தீவிரமாக நடிக்க தொடங்கி உள்ளார். டாப்சி தயாரிக்கும் இந்தி படத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. விவாகரத்து தொடர்பாக தன்னை பற்றி அவதூறு பரப்பியதாக சில யூடியூப் சேனல்கள் மீது வழக்கு தொடர்ந்தார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நாகசைதன்யாவுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் நீக்கி உள்ளார். சமூக வலைதளத்திலும் அடிக்கடி கருத்துகள் பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் பெற்றோர்களுக்கு அறிவுரை சொல்லும் வகையில், “உங்கள் மகளை யார் திருமணம் செய்து கொள்வார்களோ என்று கவலைப்பட வேண்டாம். அவளை திறமையானவளாக தயார் செய்யுங்கள். திருமணத்துக்கு பணம் சேர்ப்பதற்கு பதிலாக அவளது படிப்புக்கு செலவிடுங்கள்” என்று கூறியிருந்தார். இந்த நிலையில் தற்போது புதிதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமந்தா வெளியிட்டுள்ள பதிவில், “நான் வலிமையானவள், எதையும் தாங்கிக்கொள்பவள், நான் சரியானவள் அல்ல, எனக்கு நான் சரியானவள், நான் பின்வாங்க மாட்டேன், நான் அன்பானவள், நான் உறுதியுடன் இருக்கிறேன், நான் தீவிரமானவள், நான் மனுஷி, நான் ஒரு போராளி, எனது அம்மா சொன்னார்” என்று கூறியுள்ளார். இந்த பதிவு வைரலாகிறது.
Related Tags :
Next Story