போதை பொருள் வழக்கில் சிக்கிய இளம் நடிகை பகிர்ந்த வாழ்க்கை அனுபவம்


போதை பொருள் வழக்கில் சிக்கிய இளம் நடிகை பகிர்ந்த வாழ்க்கை அனுபவம்
x
தினத்தந்தி 5 Nov 2021 11:21 AM GMT (Updated: 5 Nov 2021 11:21 AM GMT)

போதை பொருள் வழக்கில் கைதாகி தற்போது ஜாமீனில் வந்துள்ள ஷாருக்கானின்மகன் ஆர்யன்கானுக்கு போதை பொருளை வாங்குவதற்கு உதவியதாக இந்தி இளம் நடிகை அனன்யா பாண்டே சிக்கினார். அவரது வாட்ஸ் அப் உரையாடல்களை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் வாழ்க்கை அனுபவங்களை அனன்யா பாண்டே பகிர்ந்துள்ளார்.

அனன்யா பாண்டே கூறும்போது, ‘‘ஒருநாள் நாம் அழலாம். நல்லது கெட்டது எதுவாக இருந்தாலும் வாழ்க்கையில் உறுதியாக இருக்க வேண்டும். மகிழ்ச்சியாக இருந்து வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும். இந்த சின்ன வயசிலேயே நான் வேதாந்தம் பேசுவதாக நீங்கள் நினைக்கலாம். இதெல்லாம் என் அம்மா தாத்தாவிடம் இருந்து நான் கற்றுக் கொண்டது. 

நான் சினிமா பயணம் ஆரம்பித்தது அதிர்ஷ்டம். எனக்கு நல்ல பெயர் கிடைத்தது. மாலத்தீவுகள் இதர கடலோரப் பகுதிகளில் சூரிய உதயம், அஸ்தமன வேளைகளில் ரொம்பவும் அழகாக இருக்கும். இந்த டிஜிட்டல் யுகத்தில் சின்ன விஷயங்கள் கூட சில நொடிகளில் பல கோடி மக்களுக்கு தெரிந்துவிடுகிறது. பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டிய தேவை உள்ளது'' என்றார்.


Next Story