சினிமா துளிகள்

செல்வராகவன் படத்தில் இணைந்த பிரபல இசையமைப்பாளர் + "||" + Selvaragavan is a famous composer who joined the film

செல்வராகவன் படத்தில் இணைந்த பிரபல இசையமைப்பாளர்

செல்வராகவன் படத்தில் இணைந்த பிரபல இசையமைப்பாளர்
தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் செல்வராகவன் நடிக்கும் படத்தில் பிரபல இசையமைப்பாளர் இணைந்து இருக்கிறார்.
பல வெற்றி படங்களை இயக்கிய செல்வராகவன், தற்போது நடிகராக ‘சாணிக்காகிதம்’ படத்தில் நடித்து வருகிறார். இவருடன் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இதையடுத்து பின்னணி வேலைகளில் படக்குழுவினர் கவனம் செலுத்தி வருகின்றனர்.


இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் இசையமைப்பாளராக சாம்.சி.எஸ் இணைந்து உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சாம்.சி.எஸ். தனது சமூக வலைத்தள பக்கத்தில், ’சாணிக்காகிதம்’ படத்தில் இணைவது பெருமையின் உச்சம் என்றும் ’சாணிக்காகிதம்’ படக்குழுவினர்களுடன் இணைவது எனக்கு மிகவும் மகிழ்ச்சி என்றும் தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளர் சாம்.சி.எஸ். இதற்கு முன் விக்ரம் வேதா, கைதி உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. மீண்டும் வில்லனாக நடிக்கிறார் செல்வராகவன்..!
'பீஸ்ட்' திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் செல்வராகவன் மீண்டும் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
2. புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கும் பிரஜன்
சீரியல் நடிகரும் படங்களில் கதாநாயகனாக நடித்து வரும் பிரஜன் நடிக்கும் அடுத்த படத்தின் பூஜை தொடங்கப்பட்டது.
3. செல்வராகவன் படத்துக்கு தொடரும் சிக்கல்
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக இருக்கும் செல்வராகவன், தான் இயக்கி வரும் படத்தில் இருந்து சிலர் விலகி இருப்பதால், படத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
4. நயன்தாரா படத்தில் கவின்?
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான கவின், அடுத்ததாக நடிகை நயன்தாரா உடன் கூட்டணி அமைக்க உள்ளாராம்.
5. ரஜினி படத்தில் நடித்த ஷெரின்
கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கலந்துக் கொண்டு மிகவும் பிரபலமான ஷெரின், ரஜினி படத்தில் நடித்துள்ளார்.