மைக் டைசன் படத்துடன் போஸ்டர்


மைக் டைசன் படத்துடன் போஸ்டர்
x
தினத்தந்தி 7 Nov 2021 5:04 PM IST (Updated: 7 Nov 2021 5:04 PM IST)
t-max-icont-min-icon

தெலுங்கில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர், பூரிஜெகன்னாத். தெலுங்கில் இன்றைய முன்னணி நடிகர்களில் பலரை, அதிரடி நாயகர்களாக உருவாக்கிய பெருமைக்குரியவர்.

பவன் கல்யாண், மகேஷ்பாபு, ஜெகபதிபாபு, ரவிதேஜா, ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். என இவரால் அதிரடி நாயகனானவர்களின் பட்டியல் நீளம். இவரது பல அதிரடிப் படங்கள், பிற மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றன. இவர் தற்போது ‘லிகர்’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதில் நாயகனாக தெலுங்கில் வளர்ந்து வரும் நடிகரான விஜய்தேவரகொண்டா நடிக்கிறார். இது குத்துச்சண்டை வீரரை மையப்படுத்திய படமாக உருவாகி வருகிறது.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகி வரும் இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக அனன்யா பாண்டே நடிக்கிறார். குத்துச்சண்டை படம் என்பதால், இதில் பிரபல குத்துச் சண்டை வீரரான மைக் டைசனை நடிக்க வைக்க முயற்சி செய்து வந்தனர். அதன்படியே அவரது கால்சீட்டை பெற்று, நடிக்கவைத்திருப்பதாக கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த தீபாவளி அன்று, ‘லிகர்’ படக்குழு ஒரு போஸ்டரை வெளியிட்டது. அதில் ஆக்ரோஷமாக ஒருவரை குத்தும் தோரணையில் மைக் டைசனின் படம் வெளியானது. இது தெலுங்கு ரசிகர்களிடம் மட்டுமின்றி, இந்திய அளவில் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மைக் டைசன் நடிக்கும் முதல் இந்திய திரைப்படம் இதுதான்.

1 More update

Next Story