வயதான நடிகருக்கு ஜோடியான ஸ்ருதிஹாசன்


வயதான நடிகருக்கு ஜோடியான ஸ்ருதிஹாசன்
x
தினத்தந்தி 7 Nov 2021 5:58 PM GMT (Updated: 7 Nov 2021 5:58 PM GMT)

தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை ஸ்ருதிஹாசன் அடுத்ததாக வயதான நடிகருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.

பிரபல நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். இவர் நடிப்பில் கடைசியாக ‘லாபம்’ திரைப்படம் வெளியானது. தற்போது பிரபாஸுடன் இணைந்து சலார் படத்தில் ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். இப்படத்தை அடுத்து பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடிக்க ஸ்ருதிஹாசன் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

கோபிசந்த் மாலினேனி இயக்கும் இப்படத்தின் முதற்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தற்போது இந்தப் படத்தின் நாயகியாக ஸ்ருதிஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாகப் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

முன்னதாக, கோபிசந்த் மாலினேனி இயக்கத்தில் வெளியான 'க்ராக்' படத்தின் நாயகியாகவும் ஸ்ருதிஹாசன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story