சினிமா துளிகள்

நேரடியாக ஓடிடி-யில் வெளியாகும் மோகன்லாலின் 5 படங்கள் + "||" + 5 pictures of Mohanlal released live on ODT

நேரடியாக ஓடிடி-யில் வெளியாகும் மோகன்லாலின் 5 படங்கள்

நேரடியாக ஓடிடி-யில் வெளியாகும் மோகன்லாலின் 5 படங்கள்
திரையரங்க உரிமையாளர்களுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக, மோகன்லால் நடித்து வரும் 5 படங்களை ஓடிடி-யில் வெளியிட முடிவு செய்துள்ளார்களாம்.
மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர், மோகன்லால். இவர் நடித்த ‘திரிஷ்யம் 2’ திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் நேரடியாக ஓடிடி-யில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இதனால் மோகன்லால் நடிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகி உள்ள ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ என்கிற சரித்திர படத்தையும் ஓடிடி-யில் வெளியிடப்போவதாக இப்படத்தின் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் அறிவித்து உள்ளார்.


இதுதவிர ஆண்டனி பெரும்பாவூர் தயாரிப்பில் மோகன்லால் நடித்து வரும் ‘புரோ டாடி’, ‘டுவெல்த் மேன்’, ‘அலோன்’ மற்றும் புலிமுருகன் இயக்குனர் இயக்கும் படம் என மேலும் 4 படங்களையும் நேரடியாக ஓடிடி-யில் வெளியிட அவர் முடிவு செய்துள்ளாராம்.

இந்த படங்களை தியேட்டர்களில் திரையிட்டு 21 நாட்களுக்கு பிறகு ஓடிடி-யில் வெளியிட படக்குழுவினர் அனுமதி கேட்டதாகவும், திரையரங்கு உரிமையாளர்கள் அதனை ஏற்காமல் 80 நாட்களுக்கு பிறகே ஓடிடி-க்கு கொடுக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்ததால் தியேட்டருக்கு பதிலாக ஓடிடி-யில் வெளியிடும் முடிவை எடுத்து இருப்பதாக தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மோகன்லாலின் 5 படங்கள் ஓ.டி.டி.யில் வெளியாகிறது
தியேட்டர் அதிபர்களுடன் ஏற்பட்ட மோதலால் மோகன்லால் நடித்துள்ள புரோ டாடி, 12-த் மேன், அலோன் மற்றும் ஒரு படம் ஆகிய மேலும் 4 படங்கள் ஓ.டி.டியில் வெளியாக உள்ளது.
2. தீபாவளி ரேசில் மோதும் 5 படங்கள்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முன்னணி நடிகர்கள் ரஜினி, சூர்யா, விஷால், சிம்பு, அருண் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் படங்கள் வெளியாக இருக்கிறது.
3. அடுத்தடுத்து ஓடிடி-யில் ரிலீஸாகும் சசிகுமாரின் 2 படங்கள்
தமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம் வரும் சசிகுமார், கொம்புவச்ச சிங்கம்டா, பகைவனுக்கு அருள்வாய், எம்.ஜி.ஆர்.மகன், உடன்பிறப்பே போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.
4. ஒரே நாளில் ஓடிடி-யில் வெளியாகும் சமுத்திரகனியின் 2 படங்கள்
இயக்குனரும், நடிகருமான சமுத்திரகனி நடித்துள்ள 2 திரைப்படங்கள் ஒரே நாளில் நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீசாக உள்ளது.
5. பண்டிகையில் ரிலீசாகும் பெரிய நடிகர்கள் படங்கள்
பண்டிகை காலங்களில் பெரிய நடிகர்கள் படங்களையும் மற்ற நாட்களில் சிறுபட்ஜெட் படங்களையும் வெளியிடும்படி ஏற்கனவே தயாரிப்பாளர்கள் தரப்பில் வற்புறுத்தப்பட்டு உள்ளது.