ஜப்பானிய மொழியில் வெளியாகும் கார்த்தியின் பிளாக்பஸ்டர் ஹிட் படம்


ஜப்பானிய மொழியில் வெளியாகும் கார்த்தியின் பிளாக்பஸ்டர் ஹிட் படம்
x
தினத்தந்தி 9 Nov 2021 5:45 PM GMT (Updated: 9 Nov 2021 5:45 PM GMT)

கார்த்தி நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான திரைப்படம் ஜப்பானிய மொழியில் டப்பிங் செய்யப்பட்டு ரிலீசுக்கு தயாராகி உள்ளது.

கார்த்தி நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற படம் ‘கைதி’. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தில் கார்த்தியுடன் நரேன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இதில் கார்த்தி ஆயுள் தண்டனை கைதியாக நடித்திருந்தார்.

தமிழ் சினிமா ரசிகர்களை எல்லாம் கடந்து, இந்தியளவில் பல பிரபலங்களின் பாராட்டுக்களை பெற்றதோடு, பல்வேறு விருதுகளையும் வென்றது. தற்போது இந்தியில் இப்படம் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. விரைவில் கைதி படத்தின் 2-ம் பாகமும் உருவாக உள்ளது.

இந்நிலையில், கைதி படம் ஜப்பானிய மொழியில் டப்பிங் செய்யப்பட்டு ரிலீசுக்கு தயாராகி உள்ளது. ஜப்பானில் ‘கைதி டில்லி’ என்ற பெயரில் இப்படம் வருகிற நவம்பர் 19-ந் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது. நடிகர் கார்த்தி நடித்துள்ள படம் ஒன்று ஜப்பானில் ரிலீசாவது இதுவே முதன்முறை. ஏற்கனவே ரஜினி நடித்த படங்கள் சில ஜப்பானில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளதால், கார்த்தியின் கைதி படத்துக்கும் அங்கு வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story