பிரபல நடிகருடன் நடிக்க ஆசைப்படும் அண்ணாத்த வில்லன்


பிரபல நடிகருடன் நடிக்க ஆசைப்படும் அண்ணாத்த வில்லன்
x
தினத்தந்தி 12 Nov 2021 6:25 PM GMT (Updated: 12 Nov 2021 6:25 PM GMT)

ரஜினி நடிப்பில் வெளியான அண்ணாத்த படத்தில் வில்லனாக நடித்த அபிமன்யூ சிங், பிரபல நடிகருடன் நடிக்க ஆசைப்படுவதாக ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

ரஜினிகாந்த் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் தீபாவளியை முன்னிட்டு வெளியான படம் அண்ணாத்த. இந்த படத்தில் மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பிரகாஷ் ராஜ், ஜெகபதி பாபு, அபிமன்யூ மற்றும் பலர் நடித்துள்ளனர்.  

விமர்சகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் ரசிகர்கள் மத்தியில் கனிசமான வரவேற்பை இப்படம் பெற்றுள்ளது. இப்படம் குறித்து வில்லன் நடிகர் அபிமன்யூ சிங், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், அண்ணாத்த படம் விமர்சகர்களுக்காக எடுக்கப்பட்டது இல்லை என்றும் ரஜினி ரசிகர்களுக்காக எடுக்கப்பட்டது என்றும் கூறியுள்ளார். மேலும் தமிழ் சினிமாவில் அஜித்துடன் நடிக்க ஆசைப்படுவதாகவும் கூறியுள்ளார்.

அபிமன்யூ ஏற்கனவே விஜய்யுடன் தலைவா, சூர்யாவுடன் ரத்த சரித்திரம்-2, கார்த்தியுடன் தீரன் அதிகாரம் ஒன்று போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story