சினிமா துளிகள்

போஸ்டரால் வெடித்த சர்ச்சை - சந்தானத்தின் ‘சபாபதி’ படத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு + "||" + Controversy erupts over poster - Opposition to Santhanam's 'Sabapathy'

போஸ்டரால் வெடித்த சர்ச்சை - சந்தானத்தின் ‘சபாபதி’ படத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு

போஸ்டரால் வெடித்த சர்ச்சை - சந்தானத்தின் ‘சபாபதி’ படத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு
ஸ்ரீனிவாசராவ் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள ‘சபாபதி’ திரைப்படம் வருகிற நவம்பர் 19-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம்வந்த சந்தானம், தற்போது படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். இவர் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் ‘சபாபதி’. அறிமுக இயக்குனர் ஸ்ரீனிவாசராவ் இயக்கி உள்ள இப்படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், சாயாஜி ஷிண்டே, ‘குக் வித் கோமாளி’ புகழ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற நவம்பர் 19-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.


இதையொட்டி இப்படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அதன்படி, சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் போஸ்டர் சர்ச்சையில் சிக்கி உள்ளது. ‘தண்ணீர் திறந்துவிடக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம், திரண்டு வாரீர்’ என எழுதப்பட்டுள்ள சுவரின் மீது சந்தானம் சிறுநீர் கழிப்பது போன்று புகைப்படத்துடன் அந்த போஸ்டர் உள்ளதால், அதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

அந்தவகையில், போராளிகளை இழிவுபடுத்தும் வகையில் உள்ள இந்த விளம்பரத்தை நடிகர் சந்தானம் திரும்பப் பெற வேண்டும் என தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். அப்படி செய்யாவிட்டால் தண்ணீருக்காக போராடுகின்ற மக்களோடு சபாபதி திரைப்படம் திரையிடப்படும் திரையரங்குகள் முன் போராட்டம் நடத்துவோம் என அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஆணுறை விளம்பரம் முதல்...! ஆபாச நடனம் வரை...! சர்ச்சையும்...! சன்னிலியோனும்...!
சன்னி லியோன் என்றாலே சர்ச்சை தான் அவர் சந்திக்காத சர்ச்சைகளே இல்லை.
2. ஜெயலலிதா படம் மீது கருணாநிதியின் படம்; அம்மா உணவகத்தில் சர்ச்சை
சென்னையில் அம்மா உணவகத்தில் இருந்த ஜெயலலிதா படத்தின் மீது, கருணாநிதி மற்றும் முதல்-அமைச்சர் ஸ்டாலின் படங்களை தி.மு.க.வினர் ஒட்டியது பரபரப்பு ஏற்படுத்தியது.
3. கங்கனா சர்ச்சை கருத்து: “பத்மஸ்ரீ விருதை திரும்பப் பெற வேண்டும்” - வலுக்கும் கோரிக்கை..!
சர்ச்சை கருத்து தெரிவித்த பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
4. ‘இந்தி தெரிந்தால்தான் பணம் வாபஸ்’ என ‘சொமேட்டோ’ ஊழியர் கூறியதால் சர்ச்சை
சமூக வலைத்தளங்களில் வைரலானது: ‘இந்தி தெரிந்தால்தான் பணம் வாபஸ்’ என ஊழியர் கூறியதால் சர்ச்சை மன்னிப்பு கேட்ட ‘சொமேட்டோ’ நிறுவனம்.
5. அரசு அதிகாரிகள் குறித்து உமா பாரதியின் சர்ச்சை பேச்சு - சமூக வலைதளங்களில் கடும் கண்டனம்!
அரசு அதிகாரிகளின் நிலை குறித்து உமா பாரதி வெளியிட்ட சர்ச்சை கருத்துக்கு சமூக வலைதளங்களில் கண்டனங்கள் குவிந்து வருகிறது.