சரோஜா தேவியை நேரில் சந்தித்த விஷால்


சரோஜா தேவியை நேரில் சந்தித்த விஷால்
x
தினத்தந்தி 21 Nov 2021 4:55 PM GMT (Updated: 21 Nov 2021 4:55 PM GMT)

பழம்பெரும் நடிகை சரோஜா தேவியை நடிகர் விஷால் அவரது வீட்டிற்கு சென்று சந்தித்து நலம் விசாரித்து இருக்கிறார்.

நடிகர் விஷால் நடிப்பில் தற்போது எனிமி திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. ஆனந்த் சங்கர் இயக்கிய இப்படத்தை வினோத் தயாரித்து இருந்தார். இப்படத்தை தொடர்ந்து குறும்பட இயக்குனர் து.பா.சரவணன் இயக்கத்தில் உருவாகி வரும் வீரமே வாகை சூடும் படத்தில் விஷால் நடித்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்து தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை அடுத்து அறிமுக இயக்குனர் வினோத்தின் இயக்கத்தில் தற்போது விஷால் நடித்து வருகிறார். இந்நிலையில் பழம்பெரும் நடிகை சரோஜாதேவியை அவரது வீட்டிற்கு சென்று நடிகர் விஷால் சந்தித்துள்ளார். அவரின் உடல்நலம் குறித்து விசாரித்த பிறகு அவருடன் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Next Story