சினிமா துளிகள்

எண்ணி துணிக படத்தின் புதிய அப்டேட் கொடுத்த ஜெய் + "||" + Jay gave a new update of the movie Enni Thunika

எண்ணி துணிக படத்தின் புதிய அப்டேட் கொடுத்த ஜெய்

எண்ணி துணிக படத்தின் புதிய அப்டேட் கொடுத்த ஜெய்
ரைன் ஆப் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் சுரேஷ் சுப்ரமணியன் தயாரித்துள்ள எண்ணி துணிக படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
ஜெய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘எண்ணி துணிக’. இப்படத்தில் முற்றிலும் புதுமையான பாத்திரத்தில், வித்தியாசமான வேடத்தை ஏற்றிருக்கிறார் நடிகர் ஜெய். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது இப்படத்தில் தனது காட்சிகளுக்கான டப்பிங்கை முடித்துள்ளார் ஜெய்.


ரைன் ஆப் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் சுரேஷ் சுப்ரமணியன் தயாரித்துள்ள இப்படத்தை, இயக்குனர் எஸ்.ஜே.வெற்றிச் செல்வன் இயக்கியுள்ளார். இப்படத்தில் ஜெய் மற்றும் அதுல்யா ரவி முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அஞ்சலி நாயர், வம்சி கிருஷ்ணா, வித்யா பிரதீப், மாரிமுத்து, சுனில் ரெட்டி, சுரேஷ் சுப்ரமணியன் மற்றும் பல முன்னணி கலைஞர்கள் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

சாம்.சி.எஸ் இசையமைத்துள்ள இப்படத்தின், இசை, டிரைலர் மற்றும் உலகளவில் திரையரங்குகளில் வெளியிடுவது குறித்த அறிவிப்புகளை தயாரிப்பு நிறுவனம் விரைவில் வெளியிடவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ‘விருமன்’ படத்தின் முக்கிய அப்டேட்
யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் ‘விருமன்’ படத்தை நடிகர் சூர்யா தனது 2டி நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார்.
2. டான் படத்தின் அப்டேட் கொடுத்த சூரி
டாக்டர் படத்தை தொடர்ந்து, சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் டான் படத்தின் அப்டேட்டை சூரி கொடுத்து இருக்கிறார்.
3. செல்வராகவன் - தனுஷ் படத்தின் புதிய அப்டேட்
நீண்ட இடைவெளிக்குப் பிறகு செல்வராகவன், தனுஷ் கூட்டணியில் உருவாக இருக்கும் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
4. ‘டாக்டர்’ படத்தின் வசூல் நிலவரம் - முதல் நாளிலேயே இத்தனை கோடியா?
நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது.
5. ரொமான்சுக்கு மாறிய ‘அண்ணாத்த’.... வெளியானது சர்ப்ரைஸ் அப்டேட்
ரஜினி நடித்துள்ள அண்ணாத்த படம் வருகிற நவம்பர் 4-ந் தேதி தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.