அம்மன் வேடத்தில் தமன்னா.... வைரலாகும் புகைப்படம்


அம்மன் வேடத்தில் தமன்னா.... வைரலாகும் புகைப்படம்
x
தினத்தந்தி 26 Nov 2021 10:27 PM IST (Updated: 26 Nov 2021 10:27 PM IST)
t-max-icont-min-icon

தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை தமன்னாவின் புதிய புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

நடிகைகள் அம்மன் வேடங்களில் நடித்த பக்தி படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றுள்ளன. கே.ஆர்.விஜயா உள்ளிட்ட பழம்பெரும் கதாநாயகிகள் பலர் அம்மனாக நடித்து இருக்கிறார்கள். கடந்த வருடம் வெளியான மூக்குத்தி அம்மன் பக்தி படத்தில் அம்மனாக நடித்த நயன்தாரா கதாபாத்திரத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது.

இந்த நிலையில் தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் தமன்னா தற்போது அம்மன் வேடமிட்டு தலை வாழை இலையில் உணவு சாப்பிடும் புகைப்படத்தை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

அதில், ‘‘வாழை இலையில் உணவு சாப்பிடும்போது என்னை கடவுளாக உணர்கிறேன்” என்ற பதிவையும் பகிர்ந்துள்ளார். தமன்னாவின் அம்மன் வேட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி ரசிகர்கள் பலரும் உங்களுக்கு அம்மன் வேடம் கச்சிதமாக உள்ளது. புதிய படத்தில் அம்மனாக நடிக்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். தமன்னா தற்போது தெலுங்கில் 4 படங்களிலும், இந்தியில் 2 படங்களிலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
1 More update

Next Story