சினிமா துளிகள்

அம்மனாக நடிக்கும் கவுசல்யா + "||" + kausalya actress amma character in Uttara film

அம்மனாக நடிக்கும் கவுசல்யா

அம்மனாக நடிக்கும் கவுசல்யா
சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த கவுசல்யா தற்போது குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். தமிழில் உத்ரா என்ற பெயரில் தயாராகி உள்ள திகில் படத்தில் அம்மன் வேடத்தில் கவுசல்யா நடித்து இருக்கிறார்.
தமிழில் ‘காலமெல்லாம் காதல் வாழ்க’ படத்தின் மூலம் அறிமுகமாகி 1990-களில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் கவுசல்யா. ‘நேருக்கு நேர்’, ‘ப்ரியமுடன்’, ‘வானத்தைப் போல’, ‘பூ வேலி’ ‘சந்திப்போமா’, ‘சொல்லாமலே’ உள்பட 30-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார். தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளிலும் அதிக படங்களில் நடித்துள்ளார். சில வருடங்கள் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த அவர் தற்போது குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். 

தமிழில் உத்ரா என்ற பெயரில் தயாராகி உள்ள திகில் படத்தில் அம்மன் வேடத்தில் கவுசல்யா நடித்து இருக்கிறார். விஸ்வா, விவாந்த், ரக்‌ஷா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்கள். இந்த படத்தை நவீன் கிருஷ்ணா இயக்கி உள்ளார். கவுசல்யா ஏற்கனவே ராஜகாளியம்மன், தாலி காத்த காளியம்மன் ஆகிய பக்தி படங்களில் நடித்து இருக்கிறார்.