சினிமா துளிகள்

பட்டாசு, பாலாபிஷேகத்தை எதிர்த்த சல்மான்கான் + "||" + Salman Khan opposes firecrackers and Balabhishek

பட்டாசு, பாலாபிஷேகத்தை எதிர்த்த சல்மான்கான்

பட்டாசு, பாலாபிஷேகத்தை எதிர்த்த சல்மான்கான்
பட்டாசு, பாலாபிஷேகத்தை எதிர்த்த சல்மான்கான்.
இந்தி நடிகர் சல்மான்கான் நடித்துள்ள ‘அந்திம்: தி பைனல் ட்ரூத்’ படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. இதில் மகிமா மக்வானா, ஆயுஷ் சர்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களில் சல்மான்கான் ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்தும், சல்மான்கான் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்தும் கொண்டாடிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவின. பட்டாசு, பாலாபிஷேக வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த சல்மான்கான், இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று ரசிகர்களை கண்டித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தியேட்டர்களில் ரசிகர்கள் பட்டாசுகளை வெடிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். பட்டாசுகள் வெடிப்பது உங்கள் உயிருக்கும், மற்றவர்கள் உயிருக்கும் ஆபத்து விளைவிக்கும். திரையரங்கத்துக்குள் பட்டாசுகளை தியேட்டர் உரிமையாளர்கள் அனுமதிக்க கூடாது. தண்ணீர் கூட கிடைக்காமல் கஷ்டப்படும் மக்கள் உள்ள நிலையில் ரசிகர்கள் பாலை வீணாக்குகின்றனர். பால் வாங்க முடியாத ஏழை குழந்தைகளுக்கு அந்த பாலை வழங்குங்கள்'' என்று கூறியுள்ளார்.தொடர்புடைய செய்திகள்

1. நடிகர் சல்மான்கானை சந்தித்த இயக்குனர் ராஜமவுலி
மும்பையில் ஆர்.ஆர்.ஆர் படத்தின் இறுதிக்கட்ட பணியில் இருக்கும் ராஜமவுலி சல்மான்கானை சந்தித்துள்ளார்.