சினிமா துளிகள்

அஜித்துக்கு போட்டியாக களமிறங்கும் பிரபாஸ் + "||" + Prabhas to compete with Ajith

அஜித்துக்கு போட்டியாக களமிறங்கும் பிரபாஸ்

அஜித்துக்கு போட்டியாக களமிறங்கும் பிரபாஸ்
70-களின் ஐரோப்பாவில் நடக்கும் காதல் கதையாக உருவாக்கப்படும் ராதே ஷ்யாம் படம் தமிழ், தெலுங்கு இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியானா ‘சாஹோ’ படத்திற்குப் பிறகு பிரபாஸ் ‘ராதே ஷ்யாம்’ படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.

முழுக்க முழுக்க காதல் கதைக்களத்தைக் கொண்ட இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் பாக்யஸ்ரீ, சச்சின் கடேகர், முரளி சர்மா மற்றும் பலரும் நடித்து வருகிறார்கள்.


70-களின் ஐரோப்பாவில் நடக்கும் காதல் கதையாக உருவாக்கப்படும் இப்படம் தமிழ், தெலுங்கு இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில், இப்படம் ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் அஜித்தின் 60-வது படமான ‘வலிமை’ ஜனவரி 13-ஆம் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. ஹாலிவுட்டில் களம் இறங்கும் பிரபாஸ்
இந்திய அளவில் முன்னணி நடிகராக உயர்ந்துள்ள பிரபாஸ் அடுத்து ஹாலிவுட் படமொன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
2. பாகுபலி பாணியில் பிரபாஸ் படத்தின் இரண்டாம் பாகம்
ஆதிபுருஷ் படம் திரைக்கு வந்ததும் அதன் இரண்டாம் பாகத்தையும் எடுக்க படக்குழுவினர் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
3. பொங்கல் தினத்தில் களமிறங்கும் சசிகுமார்
பொங்கல் தினத்தில் வெளியாக இருந்த அஜித்தின் வலிமை திரைப்படம் தள்ளிவைக்கப்பட்டுள்ளதால், சசிகுமார் நடித்த படம் அன்றைய தினத்தில் வெளியாக இருக்கிறது.
4. மார்க் ஆண்டனியாக களமிறங்கும் விஷால்
வீரவே வாகை சூடும் படத்திற்கு பிறகு விஷால் நடிக்கவிருக்கும் அடுத்த படத்திற்கு மார்க் ஆண்டனி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
5. 3 ஆண்டுகளுக்கு பிறகு கார் ரேசில் களமிறங்கும் ஜெய்
பிரபல நடிகர் ஜெய் படங்களில் கவனம் செலுத்தி வரும் நிலையில் அப்போது கார் ரேசில் களம் இறங்கியிருக்கிறார்.