ஆளே தெரியாமல் மாறி போன சூர்யாவின் ரீல் மகள்.... வைரலாகும் புகைப்படம்


ஆளே தெரியாமல் மாறி போன சூர்யாவின் ரீல் மகள்.... வைரலாகும் புகைப்படம்
x
தினத்தந்தி 3 Jan 2022 5:49 PM GMT (Updated: 3 Jan 2022 5:49 PM GMT)

சூர்யா, ஜோதிகா இருவரின் நடிப்பில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் நடித்த நடிகையின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் அழிக்க முடியாத காதல் திரைப்படங்களில் ஒன்றாக நிலைத்திருக்கும் படம் சில்லுனு ஒரு காதல். இப்படம் 2006-ல் வெளியாகி இருந்தாலும் இன்றுவரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு இருக்கிறது. சூர்யா-ஜோதிகாவின் வாழ்வில் மறக்க முடியாத படம் என்றே சொல்லலாம்.

இந்த படத்தில் சூர்யா ஜோதிகாவிற்கு குழந்தையாக நடித்தவர் ஸ்ரேயா ஷர்மா. இவருடைய சுட்டித்தனமான எதார்த்த நடிப்பு ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது. ஸ்ரியா ஷர்மா பல மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் இவருடைய புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ஆளே தெரியாதளவிற்கு மாறி இருக்கும் இவருடைய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்து இருக்கிறார்கள்.

Next Story