அஜித்தின் ‘வலிமை’ ரிலீஸ் தள்ளிவைப்பா?


அஜித்தின் ‘வலிமை’ ரிலீஸ் தள்ளிவைப்பா?
x
தினத்தந்தி 6 Jan 2022 3:46 PM IST (Updated: 6 Jan 2022 3:46 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா பரவல் காரணமாக வலிமை ரிலீசை தள்ளி வைக்க இருப்பதாக இணைய தளங்களில் தகவல் பரவி வருகிறது.

கொரோனா 3-வது அலை பரவல் தீவிரமாகி உள்ளதால் வட மாநிலங்களில் இரவு நேர ஊரடங்குகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. மக்கள் நடமாட்டத்துக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இதனால் தியேட்டர்களை இரவில் மூடவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டு உள்ளது.

இதையடுத்து இந்தி. தெலுங்கு படங்களின் ரிலீஸ் தள்ளி வைக்கப்படுகின்றன. ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோர் நடித்து தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் திரைக்கு வருவதாக இருந்த ஆர் ஆர் ஆர் படத்தின் ரிலீசை தள்ளி வைத்து இருப்பதாக அறிவித்து உள்ளனர்.

இதுபோல் பிரபாஸ் நடித்து தமிழ், தெலுங்கில் வெளியாக இருந்த ராதே ஷியாம் படத்தையும் மார்ச் 18-ந்தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர். அஜித்குமார் நடித்துள்ள வலிமை படம் பொங்கல் பண்டிகையில் திரைக்கு வரும் என்று ஏற்கனவே அறிவித்து இருந்தனர்.

இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் வெளியாகும் என்றும் தெரிவித்தனர். இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக வலிமை ரிலீசை தள்ளி வைக்க இருப்பதாக இணைய தளங்களில் தகவல் பரவி வருகிறது. இதற்கு விளக்கம் அளித்து படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “வலிமை படம் தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளில் ஜனவரி 13-ந்தேதி வெளியாகும்'' என்று தெரிவித்து உள்ளார்.

1 More update

Next Story