துபாயில் நயன்தாராவை சந்தித்த தனுஷ் பட நடிகை


துபாயில் நயன்தாராவை சந்தித்த தனுஷ் பட நடிகை
x
தினத்தந்தி 6 Jan 2022 6:25 PM GMT (Updated: 6 Jan 2022 6:25 PM GMT)

முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாராவை தனுஷ் படத்தில் நடித்த நடிகை ஒருவர் துபாயில் அவரை சந்தித்து பேசியிருக்கிறார்.

நடிகை நயன்தாரா ஒவ்வொரு ஆண்டும் ஓய்வுக்காகவும் சுற்றுலா செல்லவும் ஏதாவது ஒரு நாட்டிற்கு செல்வது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தை துபாயில் கொண்டாடினார். இந்த கொண்டாட்டத்தின் போது விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலானது.

நயன்தாரா துபாயில் இருந்த நாட்களில் நடிகை மெஹ்ரீன் நேரில் சந்தித்து பேசியிருக்கிறார். நடிகை மெஹ்ரீன், தனுஷ் நடிப்பில் வெளியான பட்டாஸ் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.
 மேலும் தெலுங்கில் முன்னணி நடிகையாகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story