தமிழ் - தெலுங்கில் ‘என்னை மாற்றும் காதலே’


தமிழ் - தெலுங்கில் ‘என்னை மாற்றும் காதலே’
x
தினத்தந்தி 7 Jan 2022 9:20 AM GMT (Updated: 7 Jan 2022 9:20 AM GMT)

காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்து தயாராகி இருக்கும் படத்துக்கு, ‘என்னை மாற்றும் காதலே’ என்று கவித்துவமாக பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இதில் விஷ்வா கார்த்திகேயா, ஹரிதிகா சீனிவாஸ் இருவரும் காதல் ஜோடியாக நடிக்க, கே.பாக்யராஜ், ஆம்னி, ஜெயப்பிரகாஷ், அலி, துளசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

என்.சந்திரமோகன் ரெட்டி தயாரித்து இருக்கிறார். சலபத்தி புவ்வாலா டைரக்டு செய்துள்ளார். படத்தை பற்றி அவர் கூறும்போது...

‘‘படத்தின் கதைப்படி கதாநாயகன் வேலை இல்லாத பட்டதாரி. அவர் எப்படி ஐ.ஏ.எஸ். படித்து கலெக்டர் ஆகிறார்? என்பது கதை. கதாநாயகி, ஏழைகளுக்காக பாடுபடும் பெண். அவர் எப்படி கதாநாயகனுக்கு உதவுகிறார்? என்பதற்கும் படத்தில் விடை இருக்கிறது’’ என்றார்.


Next Story