‘கர்ணன்’ நாயகியின் புதிய படம்


‘கர்ணன்’ நாயகியின் புதிய படம்
x
தினத்தந்தி 7 Jan 2022 3:31 PM IST (Updated: 7 Jan 2022 3:31 PM IST)
t-max-icont-min-icon

‘கர்ணன்’, ‘ஜெய் பீம்’ ஆகிய படங்களில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து யதார்த்தமான நடிப்பை வழங்கியவர், ரெஜிஷா விஜயன். தற்போது கார்த்தி ஜோடியாக ‘சர்தார்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இவர் நடித்து கேரளாவில் வெற்றிகரமாக ஓடிய ‘ஹலோ ஜூன்’ என்ற படம் தமிழில் தயாராகிறது. ரெஜிஷா நடித்த வேடத்தில், அவரே நடிக்கிறார்.

தனுசின் ‘ஜெகமே தந்திரம்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ், ரெஜிஷாவின் தந்தையாக நடிக்கிறார். தாயாக அஸ்வதி மேனன் நடிக்கிறார். 

கதாநாயகன் சர்ஜனோ காலித். அகமது கபீர் டைரக்டு செய்கிறார். வசனம்-பாடல்களை நவீன் முத்துசாமி எழுதுகிறார். அனில் கே.ரெட்டி, வி.ஜெயப்பிரகாஷ் ஆகிய இருவரும் தயாரிக்கிறார்கள்.

‘‘இந்தப் படம் இளைஞர்களை கவர்வதுடன், குடும்பத்துடன் பார்த்து ரசிக்கக் கூடியதாகவும் இருக்கும். நிவின்பாலிக்கு ‘பிரேமம்’ படம் அமைந்தது போல் ரெஜிஷாவுக்கு இந்த படம்  அமையும்’’ என்கிறார்கள், படக்குழுவினர்.

1 More update

Next Story