அம்மா பாசமும், அறிவியலும் கலந்த ‘கணம்’


அம்மா பாசமும், அறிவியலும் கலந்த ‘கணம்’
x
தினத்தந்தி 7 Jan 2022 10:23 AM GMT (Updated: 2022-01-07T15:53:01+05:30)

வித்தியாசமான கதைகள் எப்போதுமே ரசிகர்களை ஈர்க்கத் தவறியதில்லை. இந்தப் பட்டியலில் புதிதாக வரவிருக்கும் ‘கணம்’ என்ற படம் இடம் பிடிக்கும். அம்மா பாசத்தை மையமாக வைத்து, அதில் அறிவியல் கலந்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது’’ என்கிறார், புது டைரக்டர் ஸ்ரீகார்த்திக்.

இவர் மேலும் கூறுகிறார்:

‘‘இந்தப் படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி இருக்கிறது. சின்ன பட்ஜெட் படமாக தொடங்கி, ‘சயின்ஸ் பிக்சன்’ கலந்ததால், இப்போது ‘கணம்’ பெரிய பட்ஜெட் படமாக மாறியிருக்கிறது. ஒரு காலத்தில் ரசிகர்களின் கனவுக்கன்னியாக இருந்த அமலா, அம்மா வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் கதையை அவரை மனதில் வைத்தே எழுதினேன். 25 வருடங்களாக நடிக்காமல் இருந்த அவர், கதையைக் கேட்டதும் நடிக்க சம்மதித்தார். படம் பார்ப்பவர்கள் அனைவரும் அவரவர் அம்மாவை நினைவு கூர்வார்கள். அம்மாவை இழந்தவர்கள் கண்கலங்கி விடுவார்கள். அமலாவுடன் சர்வானந்த், ரீத்துவர்மா, நாசர், சதீஷ், ரமேஷ் திலக், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோரும் நடித்துள்ளனர்.’’


Next Story