சினிமா துளிகள்

பொங்கல் தினத்தில் களமிறங்கும் சசிகுமார் + "||" + Sasikumar banging on Pongal day

பொங்கல் தினத்தில் களமிறங்கும் சசிகுமார்

பொங்கல் தினத்தில் களமிறங்கும் சசிகுமார்
பொங்கல் தினத்தில் வெளியாக இருந்த அஜித்தின் வலிமை திரைப்படம் தள்ளிவைக்கப்பட்டுள்ளதால், சசிகுமார் நடித்த படம் அன்றைய தினத்தில் வெளியாக இருக்கிறது.
எஸ்.ஆர்.பிரபாகர் இயக்கத்தில் சசிகுமார் நாயகனாக நடிக்கும் படம் ‘கொம்புவச்ச சிங்கம்டா’. இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடித்துள்ளார். மேலும் கலையரசன், சூரி, யோகிபாபு, இயக்குனர் மகேந்திரன், ஹரீஷ் ஃபெராடி, ‘சுந்தரபாண்டியன்’ துளசி, ஸ்ரீ பிரியங்கா, தீபா ராமனுஜம் மற்றும் தயாரிப்பாளர் இந்தர்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


1990-1994 காலகட்டங்களில் தமிழகத்தின் ஒரு சிறு நகரத்தில் நடந்த பரபரப்பான உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு திபு நைனன் தாமஸ் இசையமைத்துள்ளார். ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்ய, டான் பாஸ்கோ படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். இப்படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 13ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. காஸ்டியூம் டிசைனர் திருமணத்தை நடத்தி வைத்த சசிகுமார்
தமிழ் சினிமாவில் நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வரும் சசிகுமார், காஸ்டியூம் டிசைனர் சத்யா திருமணத்தை நடத்தி வைத்திருக்கிறார்.
2. மார்க் ஆண்டனியாக களமிறங்கும் விஷால்
வீரவே வாகை சூடும் படத்திற்கு பிறகு விஷால் நடிக்கவிருக்கும் அடுத்த படத்திற்கு மார்க் ஆண்டனி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
3. அஜித்துக்கு போட்டியாக களமிறங்கும் பிரபாஸ்
70-களின் ஐரோப்பாவில் நடக்கும் காதல் கதையாக உருவாக்கப்படும் ராதே ஷ்யாம் படம் தமிழ், தெலுங்கு இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது.
4. 3 ஆண்டுகளுக்கு பிறகு கார் ரேசில் களமிறங்கும் ஜெய்
பிரபல நடிகர் ஜெய் படங்களில் கவனம் செலுத்தி வரும் நிலையில் அப்போது கார் ரேசில் களம் இறங்கியிருக்கிறார்.
5. சர்ச்சையான படத்தை எடுக்க ஆர்வம் காட்டும் சசிகுமார்
தமிழ் சினிமாவில் இயக்குனர் மற்றும் நடிகராக வலம் வரும் சசிகுமார், அடுத்ததாக சர்ச்சையான கதையை எடுக்க ஆர்வம் காண்பித்து வருகிறார்.