சினிமா துளிகள்

அனுபமாவின் லிப் கிஸ் - வைரலாகும் புகைப்படம் + "||" + Anupama's Lip Kiss - Viral Photo

அனுபமாவின் லிப் கிஸ் - வைரலாகும் புகைப்படம்

அனுபமாவின் லிப் கிஸ் - வைரலாகும் புகைப்படம்
சினிமா துறையில் கவர்ச்சிக்கும், முத்தக்காட்சிகளுக்கும் மறுத்த பல நடிகைகள் அவர்களுடைய வாய்ப்பை இழந்து பிறகு அது போன்ற காட்சிகளில் நடித்திருக்கின்றனர். இந்த பட்டியலில் நடிகை அனுபமா பரமேஸ்வரனும் தற்போது இணைந்துள்ளார்.
2015-இல் வெளியான பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமாகி முன்னணி நடிகைகளில் ஒருவராக சேர்ந்தவர் அனுபமா. இவர் தனுஷ் நடித்த கொடி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். பல மொழி படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.


திரிவிக்ரம் இயக்கத்தில் வெளியான அ ஆ தெலுங்கு படத்தில் சமந்தாவும் அனுபமா பரமேஸ்வரனும் கதாநாயகியாகளாக நடித்தனர். நல்ல வரவேற்பை பெற்ற அந்த படம் அனுபமாவிற்கு முக்கிய படமாக அமைந்தது. அதன் பிறகு அவருக்கு வந்த பல படவாய்ப்புகளில் கதாநாயகனுடன் நெருக்கமாக நடிக்கும் காட்சிகள் மற்றும் முத்தக்காட்சிகள் இருந்ததால் அப்படங்களை அவர் நிராகரித்தாக கூறப்படுகிறது.

தற்போது பிரபல தயாரிப்பாளர் தில் ராஜுவின் சகோதரர் மகன் கதாநாயகனாக நடிக்கும் ரவுடி பாய்ஸ் படத்தில் அவருக்கு ஜோடியாக அனுபமா நடிக்கிறார். இந்த படத்தின் டிரெய்லரில் அனுபமாவின் முத்தக்காட்சி இடம் பெற்றுள்ளது. அதில் இடம் பெற்ற முத்தக்காட்சி புகைப்படத்தை அனைவரும் பகிர்ந்து வருகின்றனர். அனுபமா முதல் முறையாக இதுபோன்ற காட்சிகளில் நடித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக அவருடைய ரசிகர்கள் வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தீவிர உடற்பயிற்சியில் சமந்தா... வைரலாகும் வீடியோ
முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்திருக்கும் வீடியோவிற்கு அதிக லைக்குகள் குவிந்து வருகிறது.
2. நண்பர்களுடன் புகைப்படம் எடுத்த மம்முட்டி.... வைரலாகும் புகைப்படம்
மலையாள சினிமா உலகில் உச்ச நடிகராக இருக்கும் மம்முட்டி, தனது நண்பர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
3. மீண்டும் பள்ளிக்கு சென்ற தனுஷ்... வைரலாகும் புகைப்படம்
3 படத்தில் பள்ளி மாணவராக நடித்த தனுஷ், தற்போது மீண்டும் அதுபோன்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
4. ஆளே தெரியாமல் மாறி போன சூர்யாவின் ரீல் மகள்.... வைரலாகும் புகைப்படம்
சூர்யா, ஜோதிகா இருவரின் நடிப்பில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் நடித்த நடிகையின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
5. வாயில் சுருட்டுடன் அதர்வா... வைரலாகும் போஸ்டர்
தமிழ் திரையுலகின் முக்கிய நடிகர்களில் ஒருவராக இருக்கும் அதர்வாவுடன் முன்னணி நடிகர்கள் இருவர் இணைகின்றனர்.