எல்லாத்துக்கும் அவங்க தான் காரணம் - நெகிழ்ந்து பேசிய சிம்பு


எல்லாத்துக்கும் அவங்க தான் காரணம் - நெகிழ்ந்து பேசிய சிம்பு
x
தினத்தந்தி 12 Jan 2022 5:03 PM (Updated: 12 Jan 2022 5:03 PM)
t-max-icont-min-icon

கவுரவ டாக்டர் பட்டம் பெற்ற நடிகர் சிலம்பரசன், அதன்பின் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது.

கலைத்துறையில் சாதனை படைக்கும் கலைஞர்களுக்கு முன்னணி பல்கலைக்கழகங்கள் கவுரவ டாக்டர் பட்டம் வழங்குவது வழக்கம். அதன் அடிப்படையில் நடிகர் சிலம்பரசனுக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியது.

அந்த நிகழ்ச்சிக்கு நடிகர் சிம்புவுடன் அவருடைய தந்தை டி.ராஜேந்தர் மற்றும் தாய் உஷா கலந்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய சிலம்பரசன், எல்லோருக்கும் நன்றி, என்னுடன் டாக்டர் பட்டம் வாங்கியவர்களுக்கும் நன்றி, இந்த விருது என்னுடையது கிடையாது இதற்கு முழு காரணம் என் அப்பா அம்மா தான்.

சினிமால எனக்கு எல்லாம் தெரிஞ்சு ஏதோ பண்ணிருக்கேன்னா அதற்கு அவங்க தான் காரணம். ஒன்பது மாச குழந்தைல இருந்து என்ன நடிக்க வச்சு ஒன்னு ஒன்னா சொல்லி கொடுத்துருக்காங்க.

இந்த விருது அவங்களுக்கு தான் போய்சேரும். இப்படி ஒரு அம்மா அப்பா எனக்கு அடுத்த ஜென்மத்துல கிடைப்பாங்களானு தெரியல. எல்லாம் குழந்தைகளுக்கும் இந்த மாதிரி அம்மா அப்பா கிடைக்கணும். இறைவனுக்கு நன்றி!  என்று அந்த நிகழ்ச்சியில் நடிகர் சிலம்பரசன் பேசியிருந்தார்.
1 More update

Next Story