சினிமா துளிகள்

விஜய் சேதுபதி படத்தில் ஷிவானி - உறுதிப்படுத்திய புகைப்படம்? + "||" + Shivani in Vijay Sethupathi movie - Confirmed photo?

விஜய் சேதுபதி படத்தில் ஷிவானி - உறுதிப்படுத்திய புகைப்படம்?

விஜய் சேதுபதி படத்தில் ஷிவானி - உறுதிப்படுத்திய புகைப்படம்?
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி பிறகு படங்களில் நடிக்க துவங்கியிருக்கும் ஷிவானி தற்போது வெளியிட்டிருக்கும் புகைப்படம் அனைவரையும் சிந்திக்க வைத்துள்ளது.
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற சீரியல் மூலம் நடிகையானவர் ஷிவானி நாராயணன். அதன் பிறகு கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா ஆகிய சீரியல்களிலும் ஹீரோயினாக நடித்தார். கடந்தாண்டு நடந்த பிக்பாஸ் 4-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு மிகவும் பிரபலமானார்.


அதன்பின் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் அவர் பகிர்ந்த ஒரு புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவிவருகிறது.

நடிகை ஷிவானி இயக்குனர் பொன்ராமுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து அதில் சிறந்த இயக்குனருடன் பணிபுரிவது பெருமையாக உள்ளது என்று குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் அனைவரையும் இது எந்த திரைப்படமாக இருக்கும் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. இதனை குறித்த அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளியாகும் என்று தெரிகிறது.

தற்போது பொன்ராம் விஜய் சேதுபதியை வைத்து விஜேஎஸ்46 படத்தை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. திரில்லர் படத்தில் நடிக்கும் நான்கு கதாநாயகிகள்
பிரபல நடிகைகள் சாய் தன்ஷிகா, சிருஷ்டி டாங்கே, மனிஷா ஜஸ்னானி, சந்திரலேகா ஆகிய நான்கு பேர் புதிய திரில்லர் படத்தில் நடிக்கிறார்கள்.
2. மீண்டும் பிரபல இயக்குனர் படத்தில் நடிக்கும் அனுஷ்கா
தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை அனுஷ்கா, மீண்டும் பிரபல இயக்குனர் படத்தில் நடிக்க இருக்கிறார்.
3. ரசிகர்கள் எதிர்பார்ப்பது என் படத்தில் இல்லை - பிரபு தேவா
தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் பணியாற்றி வரும் பிரபு தேவா, தற்போது தேள் படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
4. முதல் தடவையாக இந்தி படத்தில் நடிக்கும் சமந்தா
காதல் திருமணம் செய்து கொண்ட நடிகை சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவும் விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்து உள்ளனர்.
5. வெற்றிமாறனின் ‘விடுதலை’ படத்தில் கவுதம் மேனனுக்கு இப்படி ஒரு வேடமா?
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் விடுதலை படத்தில், இயக்குனர் கவுதம் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.