சினிமா துளிகள்

கேள்வி கேட்ட ரசிகர்... கடுப்பான கேப்ரில்லா + "||" + Questioned fan ... tough Gabriella

கேள்வி கேட்ட ரசிகர்... கடுப்பான கேப்ரில்லா

கேள்வி கேட்ட ரசிகர்... கடுப்பான கேப்ரில்லா
பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர்களின் ஒருவரான கேப்ரில்லா, தற்போது சின்னத்திரை தொடர்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் கேப்ரில்லா. தற்போது 'ஈரமான ரோஜாவே' சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமூகவலைதளத்தில் கேப்ரில்லாவிடம் பேசிய ஒருவர், 'நீங்கள் சினிமாவில் நடிக்கலாமே, ஏன் சீரியலில் நடிக்கிறீர்கள்' என்று கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த கேப்ரில்லா, 'சீரியலை சின்ன விசயமாக நினைக்கவில்லை. சின்னத்திரையோ, வெள்ளித்திரையோ, ஒரு நடிகராக நாம் பணியில் சிறப்பாக செய்ய வேண்டும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவரின் வீட்டிற்கும் செல்லும் சின்னத்திரை ஒன்றும் சின்ன விசயமல்ல' என்று பதில் கூறியுள்ளார்.


அதே கேள்வியை மீண்டும் ஒரு ரசிகர் கேட்க, கடுப்பான கேப்ரில்லா, 'இன்னொருவரும் இதே கேள்வியை கேட்டாலோ, இதுகுறித்து சிரித்தாலோ, உங்க கிட்ட நான் கருத்து கேட்டேனா? உங்க வேலைய பத்தி நான் கமெண்ட் பன்றேனா? வாழ விடுங்க' என காட்டமாக பதில் அளித்துள்ளார்.