சலங்கை துரை இயக்கும் புதிய படம், ‘கடத்தல்’


சலங்கை துரை இயக்கும் புதிய படம், ‘கடத்தல்’
x
தினத்தந்தி 14 Jan 2022 9:52 AM GMT (Updated: 14 Jan 2022 9:52 AM GMT)

காத்தவராயன், காந்தர்வன், இபிகோ 302 ஆகிய படங்களை டைரக்டு செய்தவர், சலங்கை துரை.

இவர் இயக்கி சமீபத்தில் திரைக்கு வந்த ‘இபிகோ 302’ வெற்றிகரமாக ஓடி, லாபம் சம்பாதித்துக் கொடுத்தது.

இதையடுத்து சலங்கை துரை இயக்கத்தில், ‘கடத்தல்’ என்ற புதிய படம் தயாராகிறது. இதில், எம்.ஆர்.தாமோதரன் கதைநாயகனாக அறிமுகமாகிறார். விதிஷா, ரியா கதாநாயகிகளாக நடிக்க, நிழல்கள் ரவி, சிங்கம்புலி மற்றும் முன்னணி நடிகர்-நடிகைகள் பலர் நடிக்கிறார்கள். படம் வேகமாக வளர்ந்து வருகிறது.

Next Story