பிக்பாஸ் சீசன் 5-இன் வெற்றியாளர் யார் தெரியுமா?


பிக்பாஸ் சீசன் 5-இன் வெற்றியாளர் யார் தெரியுமா?
x
தினத்தந்தி 16 Jan 2022 6:15 PM GMT (Updated: 2022-01-16T23:45:35+05:30)

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனின் வெற்றியாளர் யார் என்ற தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் தற்போது இறுதி நாட்களை நெருங்கியுள்ளது. இதன் வெற்றியாளர் அறிவிக்கும் நிகழ்ச்சி நடந்து முடிந்ததுள்ளது. இதில் வெற்றி பெற்றவர்கள் யார் என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்ப்பார்ப்புடன் பேசப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர் யார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

சின்னத்திரையில் களம் இறங்கி பெரிய ரசிகர்களை கவர்ந்த ராஜு, பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றார். இவர் அந்த வீட்டின் டப் காம்பட்டீட்டராக இருந்து வந்தார். இந்த சீசனில் வெற்றி பெற்றது ராஜு என்று கூறப்படுகிறது. தொகுப்பாளராக பணியாற்றி பெரிய ரசிகர்களை கவர்ந்த பிரியங்கா 2வது இடத்தை கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

3வது இடத்தை பாவனியும், 4வது இடத்தை அமீரும், 5வது இடத்தை நிரூப் பிடித்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Next Story