நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரீ-என்ட்ரி கொடுக்கும் ஹாரிஸ் ஜெயராஜ்


நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரீ-என்ட்ரி கொடுக்கும் ஹாரிஸ் ஜெயராஜ்
x
தினத்தந்தி 19 Jan 2022 6:15 PM GMT (Updated: 19 Jan 2022 6:15 PM GMT)

தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்த இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் நீண்ட இடைவேளைக்கு பிறகு ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார்.

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக இருந்தவர் ஹாரிஸ் ஜெயராஜ். இவர் கௌதம் மேனன், ஜீவா, கே வி ஆனந்த் மற்றும் ஷங்கர் ஆகிய இயக்குனர்களுடன் இணைந்து கொடுத்த ஹிட் பாடல்கள் கொடுத்தார். திடீரென அவருக்கான வாய்ப்பு குறைய ஆரம்பித்தது.

தற்போது ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ். இந்த முறை இரண்டு ஆல்பம் பாடல்களுக்கு முன்னணி தயாரிப்பாளர்களால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 96 பட தயாரிப்பாளர் நந்தகுமார் மற்றும் மகா படத்தின் தயாரிப்பாளர் மதியழகன் ஆகிய இருவரும் இந்த இரு பாடல்களையும் தயாரிக்க உள்ளனர்.

Next Story