தெலுங்கு பட இயக்குனருடன் இணையும் தனுஷ்


தெலுங்கு பட இயக்குனருடன் இணையும் தனுஷ்
x
தினத்தந்தி 20 Jan 2022 11:43 PM IST (Updated: 20 Jan 2022 11:43 PM IST)
t-max-icont-min-icon

தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ் அடுத்ததாக சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் படம் கொடுத்த இயக்குனருடன் இணைகிறார்.

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சமீபத்தில் வெளியான புஷ்பா திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் சாதனை படைத்துள்ளது. சுகுமார் இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் தென்னிந்திய திரையுலகின் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் சமந்தாவும் இப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார்.

இதைத்தொடர்ந்து புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க களமிறங்கியிருக்கும் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அடுத்ததாக எந்த கதாநாயகன் நடிக்க இருக்கிறார் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

அதன்படி இயக்குனர் சுகுமார் தனுஷை வைத்து தனது அடுத்தப் படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
1 More update

Next Story