பல வருடங்களுக்கு பிறகு திரையில் குண்டு கல்யாணம்


பல வருடங்களுக்கு பிறகு திரையில் குண்டு கல்யாணம்
x
தினத்தந்தி 25 Jan 2022 10:35 PM IST (Updated: 25 Jan 2022 10:35 PM IST)
t-max-icont-min-icon

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக கொடிக்கட்டி பறந்த குண்டு கல்யாணம் நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் திரையில் தோன்றுகிறார்.

தமிழ் சினிமாவில் 80-90-களின் காலக்கட்டத்தில் காமெடி நடிகராக கொடிக்கட்டி பறந்தவர் லட்சுமி நாராயணன் என்னும் குண்டு கல்யாணம். இவர் 1980-ஆம் ஆண்டு வெளியான மழலைப் பட்டாளம் படத்தில் அறிமுகமானார். பிறகு பல படங்களில் நடித்து அவருக்கான இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்து வைத்திருந்தார்.

இவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் சின்னத்திரையில் நடிக்க இருக்கிறார். பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் இவர் நடிக்க இருக்கிறார். இதனை அந்த சீரியலின் கதாநாயகனான செந்தில் அவருடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த சீரியலில் ஒரு சிறிய தொகுப்பில் அவர் நடிக்க இருப்பதாக செந்தில் தெரிவித்து அவருடன் எடுத்துக்கொண்ட சில புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

இவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிக்க இருப்பதால் இவருடைய கதாப்பாத்திரத்தை பெரிய எதிர்ப்பார்போடு சின்னத்திரை ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
1 More update

Next Story