வைரலாக பரவும் வலிமை படத்தின் ரிலீஸ் தேதி


வைரலாக பரவும் வலிமை படத்தின் ரிலீஸ் தேதி
x
தினத்தந்தி 30 Jan 2022 5:51 PM GMT (Updated: 30 Jan 2022 5:51 PM GMT)

நடிகர் அஜித் நடித்து ரசிகர்களால் பெரிதும் எதிர்ப்பார்க்கபடும் வலிமை படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வைரலாக பரவி வருகிறது.

நடிகர் அஜித் நடித்து, இயக்குனர் எச். வினோத் இயக்கி வெளிவர காத்திருக்கும் திரைப்படம் 'வலிமை'. இதில் ஹுமா குரேஷி, தெலுங்கு நடிகர் கார்த்திகேயா, போன்ற பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். அஜித்-எச்.வினோத்-போனி கபூர் கூட்டணியில் 'நேர்கொண்ட பார்வை' படம் வெளியாகி வருமான ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன் பிற்கு இவர்கள் கூட்டணியில் வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.

'வலிமை' படத்தின் பணிகள் முடிந்து பொங்கலுக்கு திரையரங்களில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. கொரோனா 3ஆம் அலை காரணமாக ரிலீஸ் தேதி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், ‘வலிமை’ ரிலீஸ் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி வலிமை திரைப்படம் வருகின்ற பிப்ரவரி 24 ஆம் தேதி (வியாழன்கிழமை) திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் மத்தியில் பேசப்படுகிறது.

ரசிகர்களின் பெரிய எதிர்ப்பார்ப்பாக இருக்கும் இந்த வலிமை திரைப்படம் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story