வெற்றிமாறனுடன் மீண்டும் இணைந்த அமீர்.. வெளியான அப்டேட்


வெற்றிமாறனுடன் மீண்டும் இணைந்த அமீர்.. வெளியான அப்டேட்
x

நடிகர் வெற்றிமாறன் பல படங்களை இயக்கியுள்ளார். இவர் விடுதலை- 2 திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

தனுஷ் நடிப்பில் 2007-ம் ஆண்டு வெளியான பொல்லாதவன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் வெற்றிமாறன். அதன்பின்னர் ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசூரன், விடுதலை உள்ளிட்ட படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்தார். இவர் தற்போது சூரியின் விடுதலை-2 படத்தை இயக்கி வருகிறார். தொடர்ந்து சூர்யாவின் 'வாடிவாசல்' பட பணிகளிலும் தீவிரம் காட்டி வருகிறார்.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் வெற்றிமாறன் 'வாடிவாசல்' படம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது, 'வாடிவாசல்' திரைப்படத்தில் அமீர் மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். வட சென்னையில் ராஜனாக அமீர் நடிக்கும் போது நான் சில விஷயங்கள் சொல்லி கொடுக்க வேண்டும் என்று தோன்றியது. ஆனால், வாடிவாசலில் இவர் இருந்தால் பல விஷயங்கள் எனக்கு தெரியும் என்பதற்காக நான் அவரை அணுகினேன் அமீரும் ஓகே சொல்லிவிட்டார் என்று பேசினார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான 'வடசென்னை' திரைப்படத்தில் அமீர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story