நிவின் பாலி வாங்கிய சொகுசு கார்


நிவின் பாலி வாங்கிய சொகுசு கார்
x

சொகுசு காரை நடிகர் நிவின் பாலி புதிதாக வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மலையாளத்தில் வெளியான 'பிரேமம்' படத்தின் மூலம் ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களுக்கு பிடித்தமான கதாநாயகனாக உருவெடுத்தவர், நிவின் பாலி. இவர் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தமிழில் 'நேரம்', 'ரிச்சி' ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் நிவின் பாலி ரூ.1 கோடி மதிப்பிலான சொகுசு காரை வாங்கியுள்ளார். இதே போன்ற சொகுசு காரை இதற்கு முன்பாக மோகன்லால், சுரேஷ் கோபி, பகத் பாசில், உள்ளிட்ட பிரபலங்கள் பயன் படுத்தி இருக்கிறார்கள். அந்த பிரபலங்கள் வரிசையில் தற்போது நிவின் பாலியும் இணைந்துள்ளார்.

படப்பிடிப்பு என்றாலும் சரி, நிகழ்ச்சிகள் என்றாலும் சரி இந்த காரில்தான் போகிறாராம். `இந்தக் காரால் தனக்கு நிச்சயம் அதிர்ஷ்டம் வரப்போகிறது' என்று நண்பர்களிடம் மிகவும் நம்பிக்கையுடன் பேசுகிறாராம், நிவின் பாலி.

1 More update

Next Story