'ஆத்தா உன் கோவிலிலே' பட நாயகன் நடிகர் ரவி ராகுல் டைரக்டர் ஆனார்


ஆத்தா உன் கோவிலிலே பட நாயகன் நடிகர் ரவி ராகுல் டைரக்டர் ஆனார்
x

‘ஆத்தா உன் கோவிலிலே’ பட நாயகன் நடிகர் ரவி ராகுல் முதன்முதலாக ஒரு படத்தை டைரக்டு செய்கிறார்.

ஆத்தா உன் கோவிலிலே, தமிழ் பொண்ணு, மிட்டா மிராசு ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தவர், ரவி ராகுல். இவர் முதன்முதலாக ஒரு படத்தை டைரக்டு செய்கிறார். அந்தப் படத்துக்கு, 'ரவாளி' என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.

ஆர்.சித்தார்த் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக நைரசா நடிக்கிறார். ஜெயப்பிரகாஷ், ரியாஸ்கான், பப்லு, கஞ்சா கருப்பு, அப்புக்குட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். படத்தைப் பற்றி டைரக்டர் ரவி ராகுல் கூறியதாவது:-

"ஏழை இளைஞரை, பணக்கார பெண் காதலிக்கிறாள். வீட்டில் எதிர்ப்பு வர- காதலனை வெளி மாநிலத்துக்கு இழுத்துச் சென்று, கோவிலில் திருமணம் செய்து கொள்கிறாள். தாலி கட்டிய கையோடு வேலை தேடி சென்ற காதல் கணவர் காணாமல் போகிறார். அவரை தேடுவதும், அப்போது நிகழும் சம்பவங்களும்தான் திரைக்கதை.

கதை, திரைக்கதை எழுதி நான் டைரக்டு செய்கிேறன். வினோத்குமார் ஒளிப்பதிவு செய்ய, ஜெய் ஆனந்த், மைக்கேல் யாகப்பன் ஆகிய இருவரும் இணைந்து இசையமைக்கிறார்கள். சிவரத்தா என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கிறது. படப்பிடிப்பு குற்றாலத்தில் தொடங்கி ஐதராபாத், கொல்கத்தா ஆகிய இடங்களில் தொடர்ந்து நடைபெற்றது. படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன."


Next Story