தொடர்ந்து தமிழில் ஆர்வம்காட்டும் நடிகர் சுனில்


தொடர்ந்து தமிழில் ஆர்வம்காட்டும் நடிகர் சுனில்
x

இயக்குனர் இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘புல்லட்’. இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் சகோதரர் எல்வின் கதாநாயகனாக நடிக்கிறார்.

'டைரி' பட இயக்குனர் இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'புல்லட்'.இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் சகோதரர் எல்வின் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும், முக்கிய கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். இப்படத்தை பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் கதிரேசன் தயாரிக்கிறார்.

விறுவிறுப்பான ஆக்ஷன், த்ரில்லர் ஆக உருவாக உள்ள இப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகையான வைஷாலி ராஜ் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் மூலம் இவர் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார். ஆர். சுந்தர்ராஜன், சாம்ஸ், ஷிவா ஷாரா, கே பி ஒய் வினோத், விஜே தணிகை, சென்றாயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

சாம் சி.எஸ். இசையமைக்கும் இப்படத்திற்கு 'டிமான்டி காலனி', 'டைரி' உள்ளிட்ட படங்களின் ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங் ஒளிப்பதிவை கையாளுகிறார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஒரே சமயத்தில் தயாராகும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், 'புல்லட்' திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தில் தெலுங்கு நடிகர் சுனில் இணைந்துள்ளார். இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. நடிகர் சுனில், ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளியான 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story