கவனம் இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் பட டிரைலர்


கவனம் இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் பட டிரைலர்
x

ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்திருக்கும் படம் 'டிரைவர் ஜமுனா'. 'டிரைவர் ஜமுனா' படத்தை இயக்குனர் பா.கின்ஸ்லின் இயக்கியுள்ளார்.

'வத்திக்குச்சி' படத்தை இயக்கிய இயக்குனர் பா.கின்ஸ்லின் இயக்கும் அடுத்த படம் 'டிரைவர் ஜமுனா'. இதில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இவருடன் 'ஆடுகளம்', நரேன், ஸ்ரீ ரஞ்சனி, 'ஸ்டான்ட் அப் காமடியன்' அபிஷேக், 'ராஜாராணி' பட புகழ் பாண்டியன், கவிதா பாரதி, பாண்டி, மணிகண்டன் ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். இப்படத்தை எஸ்.பி.சௌத்ரி தயாரித்திருக்கிறார். படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில் 'டிரைவர் ஜமுனா' படத்தின் டிரைலரை சிவகார்த்திகேயன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். வாலாஜாபாத்திலிருந்து ஈசிஆர் செல்லும் 90 நிமிட பயணத்தில் ஒரு பெண் ஓட்டுநர் மாட்டிக்கொள்ளும் இக்கட்டான சூழ்நிலையிலிருந்து, எப்படி தப்பிக்கிறாள் என்பதை ஆக்ஷன் கலந்த திரில்லராக பரபரப்பான காட்சிகளுடன் இடம்பெற்றிருக்கும் இந்த டிரைலர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

1 More update

Next Story