இணையத்தை கலக்கும் அஜித்தின் புகைப்படங்கள்


இணையத்தை கலக்கும் அஜித்தின் புகைப்படங்கள்
x

அஜித் ஏகே 62 படத்தில் நடிக்கவுள்ளார். தற்போது அஜித்தின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் அஜித்குமார் சினிமாவில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் ஓய்வு நேரங்களில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்து பிரபலமான இடங்களை சுற்றிப் பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளார். சமீபத்தில் பெல்ஜியம், இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் மோட்டார் சைக்கிள் பயணம் சென்றார்.

இதைத்தொடர்ந்து, 'துணிவு' படப்பிடிப்பிற்கு நடுவே இமயமலை பகுதியில் மோட்டார்சைக்கிள் பயணம் மேற்கொண்டு கார்கில் நினைவு சின்னத்தில் மரியாதை செலுத்தினார். கேதார்நாத், பத்ரி நாத் கோவில்களில் சாமி தரிசனம் செய்தார். இந்த புகைப்படங்களும் வீடியோக்களும் வலைத்தளத்தில் வெளியானது. தனது முதல் கட்ட சுற்றுப்பயணத்தை முடித்த நடிகர் அஜித் தனது இரண்டாவது கட்ட சுற்றுப்பயணத்தை விரைவில் தொடங்கவுள்ளதாக சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அஜித்தின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வலம் வந்துக் கொண்டிருக்கிறது. சென்னை விமான நிலையத்தில் அஜித்துடன் ரசிகர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர். நடிகர் அஜித் அடுத்ததாக லைகா நிறுவனம் தயாரிப்பில் ஏகே 62 படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story