30 வருடங்களாக நிறைவேறாத ஆசையுடன் ஒரு நடிகை


30 வருடங்களாக நிறைவேறாத ஆசையுடன் ஒரு நடிகை
x

‘ரோஜா’ படத்தில் கதாநாயகி கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. கால்ஷீட் இல்லாததால் ரோஜா படத்தில் நடிக்க முடியாமல் போனதற்காக ஐஸ்வர்யா இன்று வரை வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார்.

ரசிகர்களின் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய படங்களை இயக்கியவர், மணிரத்னம். இவரது இயக்கத்தில் 1992-ம் ஆண்டில் வெளியான 'ரோஜா' படம் மாபெரும் வெற்றிபெற்றது. இந்த படத்தில் அரவிந்த் சாமி, மதுபாலா ஆகியோர் நடித்திருந்தனர். படத்தின் பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தன.

'ரோஜா' படத்தில் மதுபாலா கதாபாத்திரத்தில் நடிக்க ஐஸ்வர்யாவுக்குதான் (நடிகை லட்சுமியின் மகள்) முதலில் வாய்ப்பு வந்தது. அப்போது 'கால்ஷீட்' இல்லை என்று கூறி அந்த வாய்ப்பை அவர் நிராகரித்து விட்டார். அதன்பின்னரே அந்த கதாபாத்திரத்தில் மதுபாலா நடித்தார்.

இந்த படம் வெளியாகி 30 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனதற்காக ஐஸ்வர்யா இன்று வரை வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார். 'அந்த படத்தில் மட்டும் நடித்திருந்தால் இன்றைக்கு நான் எப்படி இருந்திருப்பேன்...' என்று சொந்தபந்தங்கள் மற்றும் நண்பர்களிடம் புலம்பி தள்ளுகிறாராம்.

'இனி வருத்தப்பட்டு ஒன்றும் ஆகப்போவது கிடையாது' என்று நண்பர்களும் அவரை சமாதானம் செய்து வருகிறார்கள்.'ரோஜா' படத்தில் கதாநாயகி கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. கால்ஷீட் இல்லாததால் ரோஜா படத்தில் நடிக்க முடியாமல் போனதற்காக ஐஸ்வர்யா இன்று வரை வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார்.


Next Story