அவ என் அஞ்சல டா.. தெறிக்கவிட்ட ரசிகர்கள்.. இன்ப அதிர்ச்சியில் சூர்யா


அவ என் அஞ்சல டா.. தெறிக்கவிட்ட ரசிகர்கள்.. இன்ப அதிர்ச்சியில் சூர்யா
x

நடிகர் சூர்யா நடிப்பில் 2008-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘வாரணம் ஆயிரம்’. இப்படம் தெலுங்கில் ‘சூர்யா சன் ஆப் கிருஷ்ணன்' என்ற பெயரில் வெளியாகி ஹிட் அடித்தது.

கடந்த 2008-ஆம் ஆண்டு இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் 'வாரணம் ஆயிரம்'. இப்படத்தில் சூர்யா, அப்பா -மகன் என இரட்டை வேடத்தில் நடித்து அசத்தியிருப்பார். இவர்களுக்கு ஜோடியாக சிம்ரன், சமீரா ரெட்டி, திவ்யா நடித்திருந்தனர். இப்படத்தில் இடம்பெற்றிருந்த 'நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை', 'அவ என்ன தேடி வந்த அஞ்சல' போன்ற பாடல்கள் நம்மை காதலின் உச்சத்திற்கே கொண்டு செல்லும் அளவிற்கு ஹாரிஷ் ஜெயராஜின் இசை அமைந்திருக்கும்.

இப்படத்தின் பாடல்களுக்கு இன்று வரை ரசிகர்கள் வைப் செய்து வருகின்றனர். இப்படம் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கில் 'சூர்யா சன் ஆப் கிருஷ்ணன்' என்ற பெயரில் வெளியாகி ஹிட் அடித்தது. தற்போது பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் 'சூர்யா சன் ஆப் கிருஷ்ணன்' திரைப்படம் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. 500-க்கு மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான இப்படத்தின் முதல் காட்சியில் 'அஞ்சல' பாடலுக்கு பலர் இணைந்து நடனம் ஆடியது பலருடைய கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்நிலையில், இந்த வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள சூர்யா, உண்மையில் நீங்கள் எனக்கு ஒரு மாபெரும் இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளீர்கள் என்று கூறி, ரசிகர்களின் அன்புக்கு நன்றி தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.


Next Story