சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி


சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி
x

ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா 'லால் சலாம்' படத்தை இயக்குவது தெரிந்த விஷயம். இதில் ரஜினிகாந்த் கவுரவ தோற்றத்தில் நடிக்கிறார். விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோரும் உள்ளனர். இதற்கிடையில் ஒரு உதவி இயக்குனர் `தனது கதையைதான் 'லால் சலாம்' படமாக எடுக்கிறார்கள்' என்று சர்ச்சையை கிளப்பி இருக்கிறார். இதை யடுத்து ஐஸ்வர்யா அந்த கதையை வாங்கி படித்திருக்கிறார். பின்னர் 'லால் சலாம்' வேறு மாதிரியான கதை என்று தெரிந்திருக்கிறது. அந்த பிரச்சினைக்கு இப்போது முற்றுப்புள்ளியும் வைக்கப்பட்டுள்ளது.


Next Story