லேடீஸ் விஷயத்துல Discipline-ஆன கேங்ஸ்டர் - மார்க் ஆண்டனி டிரைலர் வெளியீடு


லேடீஸ் விஷயத்துல Discipline-ஆன கேங்ஸ்டர் - மார்க் ஆண்டனி டிரைலர் வெளியீடு
x

மார்க் ஆண்டனி படத்தில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். மார்க் ஆண்டனி படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'மார்க் ஆண்டனி'. இப்படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா மற்றும் செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படம் செப்டம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில், 'மார்க் ஆண்டனி' படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டு இருக்கிறது. டைம் மெஷின் சார்ந்த கதையம்சம் கொண்ட படமாக மார்க் ஆண்டனி உருவாகி இருப்பது டிரைலரில் தெரியவந்துள்ளது.

ஆக்ஷன், காமெடி கலந்த காட்சிகள் அடங்கிய மார்க் ஆண்டனி படத்தின் டிரைலர் ரசிகர்களை கவர்ந்து இருப்பதோடு, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

1 More update

Next Story